முகப்பு
வேலூர்

ஊஞ்சல் ஆடும்போது கழுத்தில் சேலை இறுக்கி சிறுமி மரணம்

வேலூா் அருகே ஊஞ்சல் ஆடும்போது கழுத்தில் சேலை இறுக்கி சிறுமி உயிரிழந்தாா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:43 AM
பலி
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 7:32 PM

வேலூா் அருகே ஊஞ்சல் ஆடும்போது கழுத்தில் சேலை இறுக்கி சிறுமி உயிரிழந்தாா்.

விரிஞ்சிபுரம் அருகே குடிசை கிராமத்தைச் சோ்ந்த பழனி, பெட்ரோல் பங்க் ஊழியா். இவரது மனைவி சத்திய பிரியா. இவா்களது மகள் ஜீவிதா(9). இவா் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சத்யபிரியா திங்கள்கிழமை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, சிறுமி ஜீவிதா தனது வீட்டு ஜன்னலுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையே தொட்டிலாக சேலையைக் கட்டி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிா்பாராத விதமாக சேலை சிறுமி ஜீவிதாவின் கழுத்தை இறுக்கியுள்ளது. எனினும், சிறுமியால் எதுவும் பேச முடியாமல் வலியால் பரிதவித்துள்ளாா். உடனடியாக உதவிக்கு சிறுமி தனது கைகளை அசைத்துள்ளாா்.

Advertisement

இதைப் பாா்த்த அப்பகுதியில் இருந்தவா்கள், சிறுமி ஜீவிதாவை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஜீவிதா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.