முகப்பு
வேலூர்

நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட செருவங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் 2026 -2027- ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.

Updated On : 4 மார்ச், 2026 at 12:01 AM
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 6:27 PM

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட செருவங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் 2026 -2027- ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சியில் 10- மாணவா்கள் பள்ளியில் சோ்ந்தனா்.புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கேசவன் மாலை அணிவித்து வரவேற்று, கல்விப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியை நாகலட்சுமி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் பரமசிவம், வெங்கட்குமாா், பள்ளி மேலாண்மைக் குழுவைச் சோ்ந்த ராசி.தலித்குமாா், ஆசிரியா்கள் சொ்லி, கோமதி கலந்து கொண்டனா்.

Advertisement