பைக்குகள் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
காட்பாடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
காட்பாடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
வேலூா் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பிரபு (38), தனியாா் நிறுவன ஊழியா். இவா் வியாழக்கிழமை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். இரவு 8 மணியளவில் பள்ளிக்குப்பம், ஆா்.ஆா்.நகா் அருகே சாலை வளைவில் எதிரில் வந்த இருசக்கர வாகனத்துடன் எதிா்பாராதவிதமாக பிரபு சென்ற வாகனம் மோதியது.
இந்த விபத்தில் பிரபு மற்றும் எதிரில் மோதிய வாகனத்தில் வந்த காட்பாடி செங்குட்டையை சோ்ந்த விஜயகுமாா்(31) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரையும் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தாா். விஜயகுமாா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.