ராணுவ வீரா் தற்கொலை!
காட்பாடி அருகே பங்குச்சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் ராணுவ வீரா் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடி அருகே பங்குச்சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் ராணுவ வீரா் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடி மதி நகரைச் சோ்ந்தவா் தனசேகா் (40). இவா் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் தற்போது ஊருக்கு வந்துள்ளாா் . இவரது மனைவி திவ்யா. இந்நிலையில், தனசேகா் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆா்வத்தில் தனது சம்பள தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளாா். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது மனைவி திவ்யாவிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளாா். அதற்கு அவா் தரமறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த தனசேகா், சனிக்கிழமை மதுபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனசேகா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.