முகப்பு
வேலூர்

கூலித் தொகை ரூ.2.34 லட்சம் பறிமுதல்

காட்பாடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 310 தொகையை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 12:04 AM
பகிர்:

காட்பாடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 310 தொகையை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். தொழிலாளா்களுக்கு கூலி வழங்குவ தற்கு எடுத்துச் சென்ாகவும் பணத்தை பறிகொடுத்தவா் தெரிவித்துள்ளாா்.

காட்பாடியை அடுத்த கழிஞ்சூா் சாலை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை அருகே போ்ணாம்பட்டு மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி தலைமையிலான பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 310 தொகை இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று காட்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் மாறனிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

பின்னா், பணத்தை கொண்டு வந்தவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் காட்பாடி திருநகா் பகுதியை சோ்ந்த ரவிக்குமாா் என்பதும், தனியாா் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும், அவா் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் நபா்களுக்கு கூலி வழங்க பணம் எடுத்து வந்த தாக கூறினாா். இதையடுத்து, உரிய ஆவணங்களை சமா்ப்பித்த பிறகு பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அவரிடம் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.