அக்வா டெக்ஸ் கோப்பை: கவி வாலிபால் கிளப் வெற்ற
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வெங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டரங்கில், அக்வா டெக்ஸ் கோப்பைக்காக நடந்து வரும் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஒண்டிப்புதூர் அணியை தாளியூரைச் சேர்ந்த கவி வாலிபால் கிளப் அணி வென்றது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வெங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டரங்கில், அக்வா டெக்ஸ் கோப்பைக்காக நடந்து வரும் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஒண்டிப்புதூர் அணியை தாளியூரைச் சேர்ந்த கவி வாலிபால் கிளப் அணி வென்றது.
வெள்ளிக்கிழமை நடந்த இந்தப் போட்டியில் 25-16, 25-18 என்ற புள்ளிகள் பெற்று 2-0 என்ற நேர்செட் கணக்கில் கவி அணி வென்றது. வீரபாண்டி அணியும், காளப்பட்டி அணியும் மோதியதில் 25-13, 25-17 என்ற புள்ளிகள் பெற்று காளப்பட்டி அணி 2-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து தேவராயபுரம், வேட்டைக்காரன் புத்தூர் நண்பர்கள் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் 2-0 என்ற செட் கணக்கில் தேவராயபுரம் அணி வென்றது. இதனையடுத்து பீளமேடு அணியும், வெள்ளக்கிணறு பரணி அணியும் மோதியதில் பீளமேடு அணி 25-11, 25-15 புள்ளிகள் பெற்று 2-0 என்ற நேர்செட் கணக்கில் வென்றது.
Advertisement
Advertisement
இதனையடுத்து காளப்பட்டி, கவி அணிகள் மோதியதில் 25-11, 25-13 புள்ளிகளுடன் 2-0 நேர்செட் கணக்கில் காளப்பட்டி அணி வென்றது.
இதனையடுத்து பீளமேடு, தேவராயபுரம் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் பீளமேடு அணி 2-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் இறுதியில் காளப்பட்டி, பீளமேடு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
டெக்ஸ்மோ கோப்பைக்காக நடந்த போட்டிகளில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், தமிழ்நாடு விளையாட்டு அணியும் மோதியதில் 25-14, 25-19, 25-14 என்ற புள்ளிகளுடன் 3-0 என்ற நேர்செட்டில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வென்றது.
இதனையடுத்து வருமான வரித் துறை, கோவை மாவட்ட வாலிபால் அணிகளுக்கிடையே நீண்ட நேரம் ரபரப்பான ஆட்டம் நடந்தது. இதின் இறுதியில் 23-25, 25-21, 20-25, 25-13, 15-12 என்ற புள்ளிகள் பெற்று 3-2 என்ற செட் கணக்கில் வருமான வரித் துறை அணி வெற்றி பெற்றது.