கோயம்புத்தூர்

ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாயில் தண்ணீர்த் திறப்பு

DIN

ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாயில் பாசனத்துக்காக சனிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டில் உள்ள 5 கால்வாய்கள் மூலம் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. இந்த ஆண்டு பழைய ஆயக்கட்டு கால்வாய்க்கு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு பொதுப் பணித் துறையினர் தண்ணீர் திறக்கவில்லை. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்குத் தொடர்ந்தனர். அதில், பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் திறக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏப்ரல் 21-ஆம் தேதியில் இருந்து தண்ணீர் திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 22) காலை பொதுப் பணித் துறையினர் தண்ணீர் திறந்துள்ளனர். ஐந்து கால்வாய்களிலும் சேர்த்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஐந்து நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT