கோயம்புத்தூர்

மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்

DIN

தண்ணீர் பந்தல் பகுதியில், மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, விளாங்குறிச்சி சாலை, தண்ணீர்பந்தல் பகுதியில், மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடை அமைந்துள்ளது. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜோதிமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT