கோயம்புத்தூர்

பயனீர் கல்லூரியில் கம்பன் விழா

DIN

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் கம்பன் விழா புதன்கிழமை  நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எஸ்.மகேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் கருணாம்பிகா வரவேற்றார்.கோவை கம்பன் கழகச் செயலாளர் நஞ்சுண்டன், துணைச் செயலாளர் முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து,  பாலகாண்டத்தில் பெரிதும் விஞ்சி நிற்பது வீரமா, பாசமா, குருபக்தியா, கருணையா, பெருமிதமா, காதலா என்ற தலைப்பில் மந்திரா, பூங்கோதை, கலைவாணி, பிரபாகரன், நர்மதா, கார்த்திக் ஆகியோர் பங்கேற்ற சொல்லரங்கம் நடைபெற்றது.
இறுதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கலைவாணி, பூங்கோதை,பிரபாகரன் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் துணை முதல்வர் ராஜப்பன், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் எஸ்.பத்மலோசனா, மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர் எம்.அருட்செல்வன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT