கார் மரத்தில் மோதி இருவர் சாவு
பொள்ளாச்சி அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த அரசூரைச் சேர்ந்தவர் கணேசன் (40). இவர் தனது நண்பரான மஞ்சநாயக்கனூரைச் சேர்ந்த தங்கவேல் (22) என்பவரை அழைத்துக்கொண்டு காரில் நா.மூ.சுங்கத்தில் இருந்து அரசூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். காரை கணேசன் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, மஞ்சநாயக்கனூர் பிரிவு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணேசன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தங்கவேல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து ஆழியாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.