முகப்பு
கோயம்புத்தூர்

காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகள் லாபம் தேடுகின்றன

காவிரி மேலாண்மை வாரியத்தை வைத்து தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் பல்வேறு கட்சிகள் அரசியல் லாபம் தேடுகின்றன என வானதி  சீனிவாசன் தெரிவித்தார்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 6:47 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியத்தை வைத்து தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் பல்வேறு கட்சிகள் அரசியல் லாபம் தேடுகின்றன என வானதி  சீனிவாசன் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. கயிறு வாரியம் சார்பாக விவசாய இடுபொருள்கள் வழங்க ரூ. 24 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு விவசாய இடுபொருள்கள்  வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி விவசாயிகளுக்கு இடுபொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்னை வாரிய உறுப்பினர் மோகன்ராஜ், வழக்குரைஞர்கள் துரை, சிவகுமார், பாஜக நிர்வாகிகள் தனபாலகிருஷ்ணன், சேகர், கௌரி முன்னிலை ஆகியோர் வகித்தனர்.  மெட்ராஸ் பெர்ட்டிலைசர் நிறுவன இயக்குநர் மற்றும் பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீரா பானம் உற்பத்தி செய்பவர்களுக்கு மானியம் வழங்கவும், பொள்ளாச்சியில் நீரா விற்பனை மையம் அமைக்கவும் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.  
காவரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர முடியாது.  தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை வைத்து பல்வேறு கட்சிகள் அரசியல் லாபத்திற்காக போராட்டங்களை நடத்தி வருகின்றன. திராவிடக் கட்சிகளுக்கு தற்போது ஆதரவு குறைந்து வருகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments