கோயம்புத்தூர்

நொய்யல் ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: ஆட்சியர்

DIN

நொய்யல் ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. மேலும், இந்த ஆற்று நீரானாது கோவையில் இருந்து கரூர் வரை பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கும் பயன்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோவை அருகே உள்ள ஆலாந்துறை, மத்வராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில், நொய்யல் ஆற்றுப் படுகையில் சிலர் சட்ட விரோதமாக லாரி, டிராக்டர் மற்றும் கழுதைகள் மூலமாகவும் மணல் அள்ளுவதாகப் புகார் வரத் தொடங்கியது.  எனவே, நொய்யல் ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக  மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT