குறிச்சி குளத்தில் ஆண் சடலம் மீட்பு
கோவை குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
கோவை குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
கோவை குறிச்சி குளத்தில் ஆண் சடலம் கிடந்ததை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து போத்தனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் சுமார் 55 வயதுடைய ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.