முகப்பு
கோயம்புத்தூர்

தேவாலயங்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தேவாலயங்கள் மீதான தாக்குதல், பைபிள் எரிப்பு உள்ளிட்ட சம்வங்களைக் கண்டித்து கோவையில் அனைத்து கிறிஸ்தவ சிறுபான்மைப்

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:19 am IST
பகிர்:

தமிழகத்தில் தேவாலயங்கள் மீதான தாக்குதல், பைபிள் எரிப்பு உள்ளிட்ட சம்வங்களைக் கண்டித்து கோவையில் அனைத்து கிறிஸ்தவ சிறுபான்மைப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் டி.ஜான்சன், சார்லஸ் சாம்ராஜ், சாம்சன் எட்வர்டு ஆகியோர் தலைமை வகித்தனர். 
இதில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மதபோதகர்கள் மீதான தாக்குதல்கள், பைபிள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 காஷ்மீர் சிறுமி படுகொலைக்கு நீதி வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நியூட்ரினோ, நெடுவாசல், ஸ்டெர்லைட் என மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இதில், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயகுமார், பி.ஜி.ரமேஷ், ஜெயகுமார் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.