கோயம்புத்தூர்

அன்னூரில் "சேவலுடன் செல்ஃபி': விநோதமான போட்டி தொடக்கம்

DIN

அன்னூரில் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக சேவலுடன் செல்ஃபி என்ற விநோதமான போட்டி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. 
அன்னூரில் நவநிர்மாண் சேனா அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர்கள் மற்றும்  சமூக அமைப்புகளுடன் இணைந்து  நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க அன்னூர்  வட்டத்திற்கு  உள்பட்ட  பகுதிகளில் உள்ளவர்களுக்காக "சேவலுடன் செல்ஃபி ' என்ற விநோதமான நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் அன்னூர் வட்டத்திற்கு உள்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்  சொந்தமாக நாட்டுச் சேவல் வைத்திருக்க வேண்டும்.  
இந்தப் போட்டி ஏப்ரல் 30-ஆம்  தேதி வரை நடைபெறும். பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் சொந்தமாக வளர்க்கும் நாட்டுச் சேவல்களுடன் செல்ஃபி  எடுத்து 9842044701 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை அனுப்ப வேண்டும். அனுப்பப்பட்ட செல்ஃபிகளை நிர்வாகக்குழு தேர்வு செய்து அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் 15 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக நாட்டுக்கோழி ஆர்வலர்கள் என்ற கட்செவி அஞ்சல் குழு துவங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT