கோயம்புத்தூர்

காருண்யா சார்பில் கேரளத்துக்கு உதவி

DIN

காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக விரிவாக்கத் துறை சார்பில் கேரளத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக காருண்யா பல்கலைக்கழக விரிவாக்கத் துறை சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், நிவாரணப் பொருள்களை சேகரித்து வந்தனர்.
சோப்பு, எண்ணெய், ரொட்டி, தண்ணீர், படுக்கை விரிப்புகள், மருந்து உள்ளிட்ட  அத்தியாவசியப் பொருள்களைத் திரட்டிய 40 பேர்கள் கொண்ட இந்த குழுவினர், புதன்கிழமை காலை பாலக்காடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவிப் பொருள்களை வழங்குவதற்காக புறப்பட்டனர். 
முன்னதாக இவர்கள் சென்ற வாகனங்களை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பல்கலைக்கழக பதிவாளர் எலைஜா பிளசிங், துறை டீன்கள், தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT