கோயம்புத்தூர்

கற்றல் குறைபாடுடைய பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

DIN

கற்றல் குறைபாடு உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிளை நூலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், கல்வி கற்றல் திறனை அதிகரிக்கவும் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வால்பாறை அரசு பள்ளிகளில் கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு வால்பாறை கிளை நூலகத்தில் நூலகர்கள் தனபாலன், வேலுசாமி ஆகியோர் நூல்கள் குறித்தும், அதன் பயன் குறித்தும் வியாழக்கிழமை விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். இதன் மூலம் மாணவர்கள் கல்வியின் கற்றல் திறனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT