கோயம்புத்தூர்

காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி  ஆணையரிடம் மனு

DIN

காதலர் தினத்தில் காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. 
 இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: 
 உலகம் முழுவதிலும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி, மத மற்றும் வர்க்கப் பிரிவுகளை உடைக்கும் உணர்வான காதலை மற்றும் காதலர்களை மதிக்கிறோம். ஆனால், காதல் எதிர்ப்பு என்ற பெயரில் காதலையும், காதலிப்பவர்களையும் சிலர் கண்டித்தும், தாக்கியும் வருகின்றனர். இருப்பினும், கோவையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் சில ஆண்டுகளாக காவல் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, கடந்த ஆண்டைப் போல் நிகழாண்டும் காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடவும், காதலர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT