கோவை மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, சுழற்கேடயம் வழங்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக சிறந்த அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, சுழற்கேடயம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகையை அடுத்த மூலத்துறை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 12-ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான சுழற்கேடயத்தை மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பத்திரம்மாளிடம் வழங்கினார்.
விருது பெற்ற இப்பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலமுத்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தேசிங்கு, ராஜேந்திரன், மூலத்துறை கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.