கோயம்புத்தூர்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ

DIN

கோவை, வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளாகினர்.
கோவையை அடுத்த வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 238 ஏக்கர் பரப்பில் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் சுமார் 800 டன் குப்பை கொட்டப்படுகிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை பிற்பகல் 3.15 மணி அளவில் திடீரென கரும்புகை கிளம்பியது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பார்த்தபோது குப்பைக் கிடங்கில் தீப்பிடித்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கோவை தெற்கு, பீளமேடு, வடக்கு மற்றும் பல்லடம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களல் வரவழைக்கப்பட்டன. தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், தீ அனைத்துப் பகுதிகளிலும் பரவியதால் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களின் அஜாக்கிரதை காரணமா?
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த தீ விபத்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களின் அஜாக்கிரதை காரணமாக நடந்திருக்கலாம். அதிக அளவு எளிதில் தீப் பிடிக்கக்கூடிய குப்பை இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவர இரு நாள்கள் ஆகும். எனினும் இரவு, பகலாகப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.
மூச்சுத் திணறலால் பொது மக்கள் அவதி:
வெள்ளலூர் குப்பைக் கிடங்கால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதால் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே வலுத்து வருகிறது. இந்நிலையில் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் அப்பகுதியினர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டு வெளியேறிய கரும் புகையால் அப்பகுதியைச் சுற்றிலும் சுமார் 3 கிலோ மீட்டர் வரையில் உள்ள பொதுமக்கள் சுவாசக் கோளாறால் சிரமப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT