அரசுப் பேருந்து ஒட்டுநரைத் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கோவையில் அரசு பேருந்து ஒட்டுநரைத் தாக்கியதாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கோவையில் அரசு பேருந்து ஒட்டுநரைத் தாக்கியதாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கோவை, பீளமேட்டை அடுத்துள்ள சிட்ராவில் இருந்து ஆறுமுகக்கவுண்டனூருக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் ஒட்டி வந்தார். மணிக்கூண்டு அருகே வந்தபோது இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து
இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் சரவணகுமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சரவணகுமாரைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றனர்.
சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் உக்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வாகன ஒட்டிகளைத் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.