முகப்பு
கோயம்புத்தூர்

வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழா கொடியேற்றம்

மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி  வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி,  கொடியேற்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 23 ஜூலை 2018, 7:38 am IST
பகிர்:

மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி  வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி,  கொடியேற்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த ஜூலை 17 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.  விழாவின் 6 ஆம் நாளான  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு யாகம் வளர்த்தல், அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
தேக்கம்பட்டியைச் சேர்ந்த ஊர் கவுடர்கள் நாராயணன், சிவராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், வரதராஜ், சுப்பையன், பாப்பம்மாள், ராஜேந்திரன், தொட்டதாசனூர் சங்கரப்பன், தேசப்பன், 23-கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் டி.பாண்டுரங்கன் உள்பட 200- க்கும் மேற்பட்டோர் சிம்மக் கொடியை ஏந்தியபடி கோயில் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.  இதற்கு கோயில் உதவி ஆணையர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா உள்ளிட்டோர் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் முத்தமிழ் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது. 
அதனைத் தொடர்ந்து கோயில் தலைமை பூசாரி பரமேஸ்வரன் சார்பில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு,  கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் கோயில் அலுவலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், ஆனந்தகுமார், நாகவேணி உள்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழாவின் 7 ஆம் நாளான திங்கள்கிழமை அம்மனுக்கு அலங்கார பூஜைகளும், மாலை பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தலும்,  செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு அம்மன் அழைப்பும், அதைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments