கோயம்புத்தூர்

காய்ச்சல்: கோவையில் 2 பேர் சாவு

DIN

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். 
  திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (57). இவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். 
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (55). இவரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.  கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது வரையில் டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 58 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT