கோயம்புத்தூர்

சிறுமுகை கோதண்ட ராமர் கோயில் திருவிழா தொடக்கம்

DIN

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை கோதண்டராமர் கோயில் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
  இதையொட்டி,  சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம்  கொண்டு வந்து கங்கனம் கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து 9 மணி அளவில் சிறுமுகை புதூர் வீரகுமாரர்கள் கத்தி போட, சிம்ம வாகனத்தில்  சக்தி சாமுண்டேஷ்வரி அழைப்பு நடைபெற்று.  அதன் பின்னர்  கிராம தேவதை பூஜை,  நீலகிரி ரங்ராமருக்கு கவாளம் கொடுத்து பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கோதண்டராமருக்கு பூஜை, மதியம் 12 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மகா தீபாரதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு கோதண்டராமர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 6 மணி அளவில் ராமர் கோயில் பஜனை குழுவினர், சுற்றுவட்டார பஜனை குழுவினரின் அகண்ட பஜனை நடைபெற உள்ளது. இந்த விழா வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர், ஊர்மக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT