கோயம்புத்தூர்

பேருந்து - பள்ளி வேன் மோதல்: 4 மாணவிகள் காயம்

DIN

அரசுப் பேருந்தின் பின் பகுதியில் பள்ளி வேன் மோதியதில் 4 மாணவிகள் மற்றும் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.
வால்பாறையில்  இருந்து வில்லோனி எஸ்டேட், டாப் டிவிஷனுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருத்தின் பின்னால், வால்பாறையில் இருந்து மாணவர்களுடன் தனியார் வேன் சென்று
 கொண்டிருந்தது. 
இந்த இரு வாகனங்களும் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது  சாலையில் இருந்த குழியில் பேருந்து இறங்கியதால் அதன் வேகம் குறைந்துள்ளது. அப்போது, பேருந்தின் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த வேன் பேருந்தின் பின்பகுதியில் மோதியது. 
இதில், வேன் ஓட்டுநர் பிரவீண் பலத்த காயமடைந்தார். அவரை எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
வேனில் இருந்த மாணவிகளில் வால்பாறை தனியார் பள்ளியைச் சேர்ந்த ஜோஸ்நா (17), சுகந்தி (15), நிரஞ்சனா (11), ரேஷ்மா பிரியா (12) ஆகிய 4 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இந்த விபத்து குறித்து வால்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT