கோயம்புத்தூர்

கோயிலை சேதப்படுத்திய யானைகள்

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த யானைகள், அங்கிருந்த கோயிலை இடித்து சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. சின்கோனா எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் இருந்து வெளியேறும் யானைகள் எஸ்டேட் பகுதிகளுக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.  
இந்நிலையில், பெரியகல்லாறு எஸ்டேட் பகுதிக்கு கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த 5 யானைகள்,  அங்குள்ள மாரியம்மன் கோயிலை இடித்து சேதப்படுத்தின.  இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தை வனத் துறையினர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT