கோயம்புத்தூர்

கோவையை குளிர்வித்த கோடை மழை

DIN


கோவையில் கடந்த நான்கு நாள்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழக்கத்துக்கு மாறாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் அதிகபட்சமாக 100 முதல் 103 டிகிரி வரை வெப்பம் நிலவியது. அதிக வெப்பம் காரணமாக அனல்காற்று வீசியதையடுத்து பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். 
 இந்நிலையில் கடந்த 4 நாள்களாக  கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  கோவையில் காந்திபுரம், சரவணம்பட்டி, கணபதி, காளப்பட்டி, உக்கடம், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், பேரூர், ராமநாதபுரம், சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல்  மிதமான மழை பெய்தது. கோவையின் சில பகுதிகளில் தூறல் மழை பெய்தது. இதனால், நகரில் மாலை நேரத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை  நிலவியது. கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை வானிலை மையம் சார்பில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு கோடை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT