கோயம்புத்தூர்

ஓரைக்கால்பாளையத்தில்  பழைய கட்டடத்தில் கிடந்த மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்

DIN

அன்னூர் அருகே உள்ள ஓரைக்கால்பாளையத்தில் உள்ள பழைய கட்டடத்தில் சிதறிக் கிடந்த தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னூர் ஒன்றியம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஓரைக்கால்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் நியாய விலை கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் சேதமடைந்த நிலையில் கடை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, பழைய கட்டடம் எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் இருந்தது. இந் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்தக் கட்டடத்துக்குள் திங்கள்கிழமை சென்று பார்த்தபோது அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக  அரசின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் சிதறி கிடந்துள்ளன.
இந்த மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்காமல் நியாயவிலை கடையிலேயே வைத்திருந்துள்ளனர். தறபோது, கடையை புதியக் கட்டடத்துக்கு மாற்றும் போது மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை இங்கேயே விட்டுச் சென்றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வருவாயத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT