கோயம்புத்தூர்

போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள்

DIN

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப்பயன்களை வழங்க வலியுறுத்தி கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் வெள்ளிக்கிழமை முற்றுகையிடப்பட்டது.
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தலைமை அலுவலகம் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜி.பழனிசாமி, பொதுச் செயலர் பி.செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், சேதுராமன், கே.நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், ஓய்வுபெற்ற பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்கள் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக ஓய்வூதியர்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் எச்சரித்த பிறகு ஓய்வூதியர்கள் சிலருக்கு பணப்பயன்கள் வழங்கப்பட்டன.
 இருப்பினும் மேலும் பலருக்கு வழங்கப்படவில்லை. அண்மையில் சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வூதியர்களுக்கு பணப்பயன்களை வழங்க ரூ.1,093 கோடி ஒரு வாரத்தில் ஒதுக்கப்படும் என்றார். இது தொடர்பான அரசாணை வெளியிட்ட பிறகும் கூட அந்தத் தொகை உரியவர்களுக்கு வந்து சேரவில்லை என்றனர்.
 இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசின் உத்தரவைப் பெற்று தொகையை விரைவில் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஓய்வூதியர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT