கோயம்புத்தூர்

தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் 33 பவுன் நகைகள் திருட்டு

DIN

தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.
 கோவை, காளப்பட்டி பிஎஸ்ஜி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (58). தனியார் மருத்துவமனையில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் சில நாள்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 33 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. 
இதுகுறித்து பீளமேடு போலீஸாரிடம் ராமமூர்த்தி புகார் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ராமமூர்த்தியின் வீட்டை சோதனையிட்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராப் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ராமமூர்த்தியின் வீடு அமைந்துள்ள இடத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியவர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT