கோயம்புத்தூர்

1,556 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி: அம்மன் கே.அர்ச்சுணன் வழங்கினார்

DIN


கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 7 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1563 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை அத்தொகுதி உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் வழங்கினார்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 265 மாணவியர், மன்பஉல் உலூம் பள்ளியில் பயிலும் 167 மாணவர்கள், சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் பயிலும் 210 மாணவர்கள், அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளியில் பயிலும் 253 மாணவியர், சாயிபாபா காலனியில் உள்ள ராமலிங்க செட்டியார் பள்ளியில் பயிலும் 213 மாணவர்கள், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 205 மாணவர்கள், ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 250 மாணவ, மாணவியர் என மொத்தம் 1,563 மாணவர்களுக்கு தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் காந்திபுரம் பகுதிச் செயலாளர் ஆர்.கே.ராஜன், ராமநாதபுரம் பகுதிச் செயலாளர் டி.ஜே.செல்வக்குமார், முன்னாள் துணைமேயர் லீலாவதி உண்ணி, மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், பப்பாயா ராஜேஷ், கமலக்கண்ணன், பாலமுரளி, அமான், கே.பி.எஸ்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பின்னடைவில் ஸ்மிருதி இரானி

ஒடிஸா: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! பாஜக முன்னிலை!

ஒடிசாவில் பாஜக முன்னிலை!

ஆந்திரம்: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங். பின்னடைவு!

அமேதியில் ஸ்மிருதி இரானி பின்னடைவு!

SCROLL FOR NEXT