கோயம்புத்தூர்

வால்பாறையில்  நடைபெற்ற ஜமாபந்தியில் 393 மனுக்கள்

DIN

வால்பாறையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 393 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், வால்பாறை வட்டம் நெ.1 ஆனைமலைக் குன்றுகள் கிரமம் 1428 ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில், கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வால்பாறை அமீது, துணைத் தலைவர் பொன்கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் வட்டாட்சியர் வெங்கடாசலம் வரவேற்று பேசினார்.
இதில் பங்கேற்ற மாவட்ட தீர்வாய அலுவலர் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் ஸ்வர்னராஜ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் உதவித் தொகை மற்றும் சான்றிதழ்கள் பெறுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் மொத்தம் 393 மனுக்கள் பெறப்பட்டு சில மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT