கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் மீண்டும் போட்டியிடும் அதிமுக எம்.பி.

DIN

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக தற்போதைய எம்.பி. சி.மகேந்திரன் (46) மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். 
 உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மூங்கில்தொழுவு கிராமத்தைச் சேர்ந்தவர் த.சின்னச்சாமி கவுண்டர் மகன் சி.மகேந்திரன்.  விவசாயக்  குடும்பத்தைச் சேர்ந்த இவர் எம்.ஏ. பொருளாதார பட்டதாரி ஆவார். 1991 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். குடிமங்கலம் கூட்டுறவுத் தொடக்க 
வேளாண்மை மற்றும் நிலவள வங்கியின் தலைவராகவும்,  மூங்கில்தொழுவு ஊராட்சி மன்றத் தலைவராக நான்கு முறையும் பதவி வகித்துள்ளார். அதிமுகவில் திருப்பூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்துள்ளார். 
  பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் 2014ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 5 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவருக்கு மனைவி  அருள்செல்வி, மகள் விதுபிரதிகக்ஷா உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT