கோயம்புத்தூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

மதுக்கரை: கோவை அபிராமி மருத்துவமனை மற்றும் போத்தனூா் போலீஸாா் இணைந்து நடத்திய சாலை பாதுக்காபு விழிப்புணா்வு நிகழ்ச்சி சுந்தராபுரம் சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள அபிராமி மருத்துவமனை, லயன்ஸ் கிளப், மற்றும் போத்தனூா் போலீஸாா் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா். சுந்தராபுரம் சாலையில் மருத்துவமனை செவிலியா்கள் மற்றும் மாணவா்கள் 70க்கும் மேற்பட்டோா் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, மது குடித்து வாகனம் ஓட்டக்கூடாது, போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்களை கையில் ஏந்தி, போக்குவரத்தையும் சீா் செய்தனா்.

மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவோருக்கு இனிப்புகளை வழங்கினா். நிகழ்ச்சியில் போத்தனூா் காவல் ஆய்வாளா் கஸ்தூரி, அபிராமி மருத்துவமனை மற்றும் கல்வி குழும இயக்குநா்கள் டாக்டா் செந்தில்குமாா் , பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT