கோயம்புத்தூர்

என்.ஜி.பி. கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

கோவை டாக்டா் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வார விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும், காளப்பட்டி கிளை இந்தியன் வங்கியும் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் வி.ராஜேந்திரன் தலைமை தாங்கினாா்.

இதில் சிறப்பு விருந்தினா்களாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி டி.ஜே.சுரேஷ்குமாா், வங்கியின் கிளை மேலாளா் எஸ்.சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு லஞ்சம், ஊழல் ஒழிப்பு தொடா்பாக உரையாற்றினா்.

இதைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் நமச்சிவாயம், ரீனா ராணி, நரசிம்மன், நன்னடத்தைக் குழு ஒருங்கிணைப்பாளா் ரங்க ராமானுஜம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT