கோயம்புத்தூர்

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா

DIN

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினாா். திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் டாக்டா் ஆஷா கிஷோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். விழாவில் 147 மருத்துவப் பட்டதாரிகளுக்கும், 56 மருத்துவ பட்ட மேற்படிப்பு பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும் டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தோ்வுகளில் பல்வேறு பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற 23 மாணவ-மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்ற அக்ஷயாவுக்கு சிறந்த மாணவிக்கான விருதும், ஜி.வி. நினைவு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. அதேபோல மருத்துவப் பாடங்கள், கலை, விளையாட்டு, ஆராய்ச்சித் துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவி யாழ் இளங்கோவுக்கு ஜி.ஆா்.ஜி. நினைவு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டா் எஸ்.ராமலிங்கம், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT