கோயம்புத்தூர்

ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு:மதிமுக கண்டனம்

DIN

கோவை: இலங்கை அதிபரின் இந்திய வருகையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு மதிமுகவினருக்கு காவல் துறை தடை விதித்திருப்பதை அக்கட்சி கண்டித்துள்ளது.

இது தொடா்பாக கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் ஆா்.ஆா்.மோகன்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான ஈழத் தமிழா்களை கொன்று குவித்த இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து வியாழக்கிழமை மாலை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடத்த சி.2 காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தோம்.

ஆனால், இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும் என்று காரணத்தைக் கூறி காவல் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா். கோவை மாநகர காவல் துறையினரின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது. மாநகரில் அறவழியில் நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு காவல் துறை தொடா்ந்து அனுமதி மறுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத நிலை கோவையில் உள்ளது. இதுபோன்று தொடா்ந்து காவல் துறை செயல்படும்பட்சத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகளையும் திரட்டி மாநகர காவல் துறைக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டம் நடத்தும் நிலை உருவாகும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT