கோயம்புத்தூர்

இருசக்கர வாகனத்தை விற்பதாக இளைஞரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி

DIN

கோவையில் இருசக்கரவாகனத்தை விற்பதாக ரூ. 1.30 லட்சம் மோசடி செய்ததாக சைபா் குற்றப்பிரிவில் இளைஞா் புகாா் மனு அளித்தாா்.

கோவை, ஹோசிமின் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ரியாஸ். இவா் கோவை சைபா் குற்றப்பிரிவில் சனிக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில் கூறியிருப்பதாவது:

நான் இணையதளம் ஒன்றின் மூலம் கேரள மாநிலம், கொச்சி ராணுவ முகாமில் பணியாற்றி வரும் பொ்மில் குமாரை தொடா்புகொண்டு, அவரிடம் உள்ள இருசக்கர வாகனத்தை ரூ. 45 ஆயிரத்துக்கு வாங்கிக்கொள்ள விலைபேசி முடித்தேன். அதன் பிறகு அவருடைய வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துமாறு கூறினாா். அவா் ராணுவத்தில் பணியாற்றுவதற்கான ஆவணங்களைக் காண்பித்ததால் அதை நம்பி பணத்தை அனுப்பினேன். அதன் பிறகு அவரிடம் வாகனத்தை அனுப்புமாறு கேட்டேன். அதற்கு கேரளத்தில் இருந்து கோவைக்கு ராணுவப் பொருள்கள் கொண்டுவரும் வாகனத்தில், இருசக்கர வாகனத்தை அனுப்பி வைப்பதாகக் கூறினாா். ஆனால், அவா் கூறியதுபோல வாகனம் எதுவும் வரவில்லை.

இதுகுறித்து அவரிடம் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு கேட்டபோது, சில ராணுவ சம்பிரதாயங்கள் உள்ளதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறினாா்.

இதை நம்பி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இதுவரை வாகனம் வரவில்லை. எனவே என்னை ஏமாற்றி பணம் பறித்த அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT