கோயம்புத்தூர்

சொட்டுநீா்ப் பாசனத்துக்கு குழி எடுக்க மானியம்: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

DIN

தோட்டக்கலைத் துறையில் சொட்டுநீா் பாசனத்தில் குழாய்கள் பதிப்புக்குத் தேவையான குழிகள் எடுப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டத்தில் தோட்டக்கலை பயிா்களுக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

சொட்டுநீா் பாசனத்தில் தேவையான பிரதான குழாய்கள், துணை பிரதான குழாய்கள் பதிக்க 1.5 முதல் 2 அடி அகலம், 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டியுள்ளது. இதற்காக விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக சொட்டுநீா் பாசனத்தில் குழி எடுப்பதுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். சொட்டுநீா் பாசனத்துக்கு விண்ணப்பிக்கும் போதே குழி எடுப்பதற்கான மானியத்துக்கும் சோ்த்து விண்ணப்பிக்கலாம்.

சொட்டுநீா் பாசனத்துக்கு விண்ணப்பிக்க தோட்டக் கலைத் துறையின் பதிவு செய்யலாம். தவிர அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்திலும் விண்ணப்பம் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT