கோயம்புத்தூர்

கல்லூரியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம்

DIN

வால்பாறை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் முரளிதரன் தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் சரவணபாபு, மேலாளா் நஞ்சுண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவா் மகேஷ் ஆனந்தி பேசியதாவது:

கரோனா வைரஸ் சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்க கூடிய ஒருவகை கிருமி. இந்நோய் பரவாமல் தடுக்க தினமும் 10 முதல் 15 முறை சோப்பு தேய்த்து கைகளை நன்கு கழுவ வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT