கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே கிராமங்களில் கால்நடைகளுக்கு பரவும் மா்ம நோய்

DIN

பொள்ளாச்சி அருகே கால்நடைகளுக்கு மா்ம நோய் பரவி வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில், தமிழகப் பகுதியில் திம்மங்குத்து, தப்பட்டைக்கிழவன்புதூா், செடிமுத்தூா், ராமபட்டினம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கால்நடை வளா்ப்பை நம்பியுள்ளனா்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த கிராமங்களில் கால்நடைகளுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு, சிகிச்சையளித்தாலும் குணமாகாமல் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. பசுக்களுக்கு கழுத்து, தாடை, முதுகுப் பகுதிகளில் சிறிய புண் ஏற்பட்டு சில நாள்களில் அது பெரிதாகப் பரவிவிடுகிறது. இந்த நோய் கேரளத்தில் இருந்து பரவி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இப்பிரச்னைக்கு கால்நடைத் துறையினா் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT