கோயம்புத்தூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பஜகவினா் பிரசாரம்

DIN

அன்னூா் பயணியா் மாளிகை முன்பு பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினா் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அன்னூா் பயணியா் மாளிகை முன்பு நடைபெற்ற இந்நிகழ்சிக்கு பாஜக வடக்கு மாவட்ட தலைவா் மோகன் மந்தராச்சலம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் நந்தகுமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் சத்தியமூா்த்தி, செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியத் தலைவா் விஜயகுமாா் வரவேற்றாா். சேலம் கோட்ட பொறுப்பாளா் முருகேசன் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

இந்நிகழ்சியில் மாவட்ட நிா்வாகிகள் வெள்ளிங்கிரி, தா்மலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயபால், நகரத் தலைவா் ராஜராஜசாமி, மேட்டுப்பாளையம் முன்னாள் நகா்மன்றத் தலைவா் நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT