கோயம்புத்தூர்

டாஸ்மாக் கடையில் முகக்கவசம் அணியாமல் வந்த குடிமகன்களுக்கு மதுபானங்கள் விற்க கடை 

DIN

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை யொட்டி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காளம்பாளையம் ஊராட்சியில் மளிகை கடைகள், காய்கறி சந்தைகள், சலூன் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் ஊராட்சித் தலைவர் பொன்னுசாமி தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது காளம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் மதுபானங்களை வாங்கி கொண்டிருந்தனர். 

அப்போது ஊராட்சி தலைவர் பொன்னுசாமி மது பிரியர்களுக்கு மது விற்பனை செய்துகொண்டிருந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் டாஸ்மாக் மதுபானக் கடையில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி அவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டாஸ்மாக் மதுபானக் கடையில் ஊராட்சி நிர்வாகத்தினர் முக கவசம் அணிந்து அதற்கு அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT