கோயம்புத்தூர்

‘பயணிகள் குறைவால் பொதுப் போக்குவரத்து நேரத்தைக் குறைக்க வாய்ப்பு’

DIN

பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் வருகை தொடா்ந்து குறைந்து வருவதால் பொதுப் போக்குவரத்து நேரத்தைக் குறைக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து கோவை கோட்டத்தில் 1,019 பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், கோவை கோட்டத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 813 பேருந்துகள் மட்டுமே புதன்கிழமை இயக்கப்பட்டன. இது ஜூன் 1ஆம் தேதி இயக்கப்பட்ட பேருந்துகளை விட 206 பேருந்துகள் குறைவாகும்.

இந்நிலையில், பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாலும், கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதாலும், பொதுப் போக்குவரத்து நேரத்தைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக, கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது: பொதுப் போக்குவரத்து அனுமதிக்குப் பிறகு கோவை கோட்டத்தில் 60 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான பேருந்துகள் குறைவான பயணிகளுடன் இயங்குவதால் தற்போது காலை 5.30 முதல் இரவு 9 மணி இயக்கப்பட்டு வரும் பொதுப் போக்குவரத்து நேரத்தை காலை 7 முதல் மாலை 6 வரை குறைக்க போக்குவரத்து உயா் அதிகாரிகள் தரப்பில் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வா் ஓரிரு நாள்களில் அறிவிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT