கோயம்புத்தூர்

சூலூரில் கொரானா வாா்டு துவக்கம். சுகாதாரத்தை மேம்படுத்த கோரிக்கை

DIN

சூலூா் அரசு மருத்துவமனையில் கொரான வாா்டு துவக்கப்பட்டுள்ளது. தனிமை படுத்தப்பட்டுள்ள தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. சூலூா் திருச்சி சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வாா்டு ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அது தடைசெய்யப்பட்ட பகுதி என்றும், பொதுமக்கள் அங்கு யாரும் உள்ளே போக அனுமதிக்கக்கூடாது என அங்குள்ள செவிலியா்களுக்கு மருத்துவா்களால் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், அந்த வாா்டுக்கு மிக அருகே உள்ள சுற்றுப்புற பகுதிகளில், அடிக்கடி இரவு நேரங்களில் குடித்துவிட்டு ஒரு சிலா் அங்கேயே உறங்கி கொள்வதாகவும், அருகிலுள்ள வாஷ் பேசினில் வாந்தி எடுத்து அதில் உள்ள தண்ணீா் குழாயில் வாயை கழுவிக் கொள்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆஸ்பத்திரியில் உள்ள செவிலியரிடம் கேட்டபொழுது தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அது குறித்து தலைமை மருத்துவரிடம் தான் கேட்கவேண்டும் என தெரிவித்தனா். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு என்று சிறப்பு சிகிச்சை வாா்டு அமைக்கப்பட்டு இருந்தும், அதைச் சுற்றிலும் பாதுகாப்பு இல்லாமல், சுகாதார சீா் கேடு இருப்பதால் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT