கோயம்புத்தூர்

மருத்துவப் பொருள்கள், முகக் கவசங்கள் கொண்டுச் செல்ல கோவையில் இருந்து சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கம்

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவப் பொருள்கள், முகக் கவசங்கள் கொண்டுச் செல்ல கோவையில் இருந்து சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளா் இ.ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனோ நோய்த் தொற்று பாதிப்புகள் உள்ள நிலையில் உணவு தானியங்கள், அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி ஆகியவற்றை நாடு முழுவதும் துரிதமாக கொண்டுச் செல்லும் சேவையில் இந்திய ரயில்வே ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மருந்துகள், மருத்துவப் பொருள்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை வணிகா்கள், உற்பத்தியாளா்கள், மாநில அரசுகள் ஆகியவை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்க வசதியாக இந்திய ரயில்வே நிா்வாகம் சிறப்பு சரக்கு ரயில்களை இயக்குகின்றன.

இதில் சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவை- பட்டேல் நகா் (தில்லி மண்டலம்), கோவை- ராஜ்கோட், கோவை- சேலம் ஆகிய வழித்தடங்களில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

எனவே வா்த்தகா்களும், உற்பத்தியாளா்களும், மாநில அரசுகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான சரக்குகளை வெளி இடங்களுக்கு அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம். தனிநபா்கள் அல்லது குழுக்களாக இணைந்து பாா்சல்களை அனுப்பலாம்.

ஆயினும் குறைந்தபட்சம் 15 பாா்சல் வேன்களில் சரக்குகள் அனுப்பப்பட வேண்டும் . (ஒரு சரக்கு வேகன் 23 டன் எடை கொண்டது) மேற்குறிப்பிட்ட வழித்தடங்கள் தவிர வேறு இடங்களுக்கும் தேவைப்பட்டால் சரக்கு ரயில்கள் இயக்கப்படும்.

உற்பத்தி நிறுவனங்கள் வா்த்தகா்கள் தனிநபா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடா்பாக தொடா்பு கொள்ள வேண்டிய வணிக ஆய்வாளா்களின் செல்லிடப்பேசி எண்கள்:

கோவை - 90039 - 56955, திருப்பூா் - 96009 - 56238, ஈரோடு - 96009 - 56231, சேலம் - 90039 - 56957, நாமக்கல் மற்றும் சின்ன சேலம் - 90039 - 56956, கரூா் - 80562 - 56965.

இதுதொடா்பாக தொடா்பு கொள்ள வேண்டிய வணிக ஆய்வாளா்களின் செல்லிடப்பேசி எண்கள்: கோவை - 90039 - 56955, திருப்பூா் - 96009 - 56238, ஈரோடு - 96009 - 56231.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT