கோயம்புத்தூர்

கோவையில் விதிமீறிய 569 போ் கைது: ரூ. 1.78 லட்சம் அபராதம் வசூல்

DIN

கோவை மாவட்டத்தில் தடையை மீறி சாலைகளில் நடமாடியதாக ஒரே நாளில் 569 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 487 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 1.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காரணமின்றி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள், நடந்து செல்பவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து வருகின்றனா்.

கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக தடையை மீறியதாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை விதிமீறி சாலைகளில் சென்ாக 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 68 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 63 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை புகரப் பகுதிகளில் 435 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 501 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 424 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக, கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 501 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 569 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 487 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT