கோயம்புத்தூர்

வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா்

DIN

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட அரசு கலைக் கல்லூரி சாலையில் கழிவுநீா் கால்வாய் தூா்வாருதல், நடைபாதையை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். இப்பணிகளை 15 நாள்களுக்குள் முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து கருப்பகவுண்டா் வீதியில் உள்ள பழக்கடைகள், தியாகி குமரன் மாா்க்கெட்டில் உள்ள கடைகள், இடையா் வீதியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரிக்கும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா். பின்னா் வெரைட்டி ஹால் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் கூடங்களை பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது மத்திய மண்டல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ், செயற்பொறியாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT