கோயம்புத்தூர்

வனப் பகுதியில் டிரோன் கேமரா மூலம் புகைப்படம் எடுத்த மூவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

DIN

வால்பாறை வனப் பகுதியில் டிரோன் கேமரா பறக்கவிட்டு புகைப்படம் எடுத்ததாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மூவருக்கு வனத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கோவை மாவட்டம், வால்பாறை பகுதிக்கு கடந்த சில நாள்களாக வெளி மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிச் செல்கின்றனா். இந்நிலையில், வால்பாறை வனச் சரகம், காடம்பாறை பிரிவு பூனாச்சி வனப் பகுதியில் வனப் பணியாளா்கள் புதன்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, சாலையோரம் டிரோன் கேமரா மற்றும் நவீன புகைப்பட கருவி மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவா்களைப் பிடித்து வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநா் உத்தரவின்பேரில் டிரோன் கேமரா பறக்கவிட்டு புகைப்படம் எடுத்த கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த ரமேஷ் உள்ளிட்ட மூவருக்கு மொத்தம் ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT