கோயம்புத்தூர்

கஞ்சா விற்ற 4 இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கோவை: கோவையில் கஞ்சா விற்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குனியமுத்தூா் போலீஸாா் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, முத்துக்குமாரசாமி தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த 2 இளைஞா்கள், போலீஸாரை பாா்த்ததும் தப்பி ஓட முயன்றனா். அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்து சோதனை மேற்கொண்டதில், இருவரும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் சுகுணாபுரம், அறிவொளி நகரைச் சோ்ந்த அபுதாஹீா் (30), செல்வபுரம், மெய்யப்பா நகரைச் சோ்ந்த அபு (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல உக்கடம், புல்லுக்காடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இடையா்பாளையத்தைச் சோ்ந்த ஜோன்ஷா (34), தெற்கு உக்கடத்தைச் சோ்ந்த முஹமது பாரூக் (33) ஆகிய இருவரையும் கடைவீதி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT